லாக்டவுனை நீட்டிக்க வலியுறுத்தல்; முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை!
PM Modi discuss with CMs regarding lockdown extension
கொரோனா பரவலை தடுக்க சில மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் நாளை அணைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்தாலோசிக்க உள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய கோரோவை தடுக்க சமூக விலகல் தான் ஒரே வழி என்பதால் பல்வேறு நாடுகள் ஊரடங்கினை கையில் எடுத்துள்ளன. இந்தியாவில் முதல் கட்டமாக 21 நாட்களும் பின்னர் 19 நாட்களும் சேர்த்து மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய ஊரடங்கு நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவது போல் இல்லை. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிஷா மாநிலங்கள் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளன.
மேலும் குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசு எடுக்கும் முடிவினை ஏற்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாளை அணைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்தாலோசிக்க உள்ளார். இதில் லாக்டவுனை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாம்.