டெல்லியில் 51,000 அரசு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்!!
டெல்லியில் 51,000 அரசு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 51,000 அரசாங்கத் துறைகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் விநியோகம் செய்தார்.
காணொலி காட்சி மூலம் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், பல்வேறு துறைகள் குறித்து பேசியிருந்தார். பார்மா மற்றும் ஆட்டோமொபைல் போன்றவை வேகமாக வளர்ந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறை ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் பங்களிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும் 2030-க்குள் இளைஞர்களுக்கு 13-14 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, என்று அவர் கூறினார். உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்றார் பிரதமர்.
"அதற்க்கு நான் முழு உத்தரவாதத்தை அளிக்ககிறேன். மேலும், அதை முழுப் பொறுப்புடன் செய்வேன்," என்றும் அவர் கூறினார்.
"இன்று நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். அவர்களை 'அம்ரித்' என்று அழைக்கிறேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, முன்னர் குற்றத்திற்கு பெயர் போன உத்தரபிரதேசம் இன்று சட்ட ஒழுங்கு நிலைமைக்கு பின் சிறந்த முதலீடு மாநிலமாக உள்ளது என்று உத்தரபிரதேசத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, சிறந்த சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.