தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை பதிவு செய்த பிரதமர் மோடி; விபரம் உள்ளே!
தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை பதிவு செய்த பிரதமர் மோடி; விபரம் உள்ளே!
உலகத்தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் 2025 பண்டிகை களைகட்டி இருக்கிறது. போகிப்பண்டிகையைத் தொடர்ந்து, நாளை பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. இதனிடையே, பொங்கல் வாழ்த்துக்களை பிரதமர் தமிழில் பதிவு செய்துள்ளார்.
பிரதமர் ட்விட்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட் பதிவில், "எனது அமைச்சரவை சகாவான திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். மிகச்சிறந்த கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்தேன்.
இதையும் படிங்க: பார்வை மாற்றுத்திறன் மனைவி வரதட்சணைக்காக கொலை; கணவர் வெறிச்செயல்.!
பொங்கல் வாழ்த்து
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது.
சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பசுவின் மடியை அறுத்த நபர்; போதையில் அரங்கேறிய பயங்கரம்.!