300 கிலோமீட்டர் வேகத்தில் நெடுஞ்சாலையில் பைக் ஓட்டிய நபர்..! அதன்பின் என்னாச்சு தெரியுமா.? வைரல் வீடியோ.!
Police arrest man who drive bike AT 300 km per hr on highway viral video
பெங்களூருவில் முக்கிய சாலை ஒன்றில் இளைஞர் ஒருவர் 300 கிலோ மீட்டர் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்தநிலையில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளன்னர்.
29 வயதான முனியப்பா என்ற இளைஞர் கடந்த 5 ஆம் தேதி தனது 1000 சிசி யமஹா பைக் ஒன்றில் பெங்களூருவின் முக்கியமான சாலை ஒன்றில் சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இளைஞர் பதிவிட வீடியோ வைரலாகியுள்ளது.
வீடியோ வைரலானநிலையில் இதுகுறித்து விசாரிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து பெங்களூரு போலீசார் அந்த இளைஞரை கைதுசெய்து அவரது பைக்கையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், அந்த இளைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபோன்று பல்வேறு வீடியோக்களை இதற்கு முன்னரும் பதிவேற்றம் செய்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா காரணமாக பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டிற்கும் நிலையில், இளைஞர் செய்த இந்த பதறவைக்கும் சாகசம் அனைவரும் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.