தனிமையின் கொடுமையில் வசித்த முதியவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீசார்..! நெகிழ்ச்சி வீடியோ.!
Police celebrated birthday of senior citizen during lockdown surprisingly
பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், தனியாக வசித்துவந்த முதியவருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி போலீசார் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ளநிலையில் ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த போலீசார் ஒரு முதியவரின் வீட்டின் முன் நின்று வீட்டில் இருந்த முதியவரை வெளியே அழைக்கின்றனர்.
அவர் வெளியே வந்ததும் உங்கள் பெயர் என்ன என போலீசார் கேட்க, அதற்கு கரண் புரி எனவும், நான் இங்கே தனியாக வசித்துவருவதாகவும் போலீசாரிடம் கூறிக்கொண்ட வெளியே வருகிறார். உடனே தங்கள் கையில் இருந்த கேக்கை நீட்டி போலீசார் அந்த முதியவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகின்றனர்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த முதியவர் போலீசாரின் அன்பில் நெகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறார். இதுகுறித்து கூறியுள்ள போலீசார், அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதாகவும், தங்கள் தந்தை தனியாக இருக்கிறார். அவருக்கு 71 வது பிறந்தநாள் வருகிறது, அவருடைய பிறந்தநாளை கொண்டாட முடியுமா என கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் தனியாக இருந்த அவரை மகிழ்விப்பதற்காக பிறந்தநாளை கொண்டாடியதாக போலீசார் கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவிருக்கிறது.