×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல மாநிலங்களில் இருந்து சிறுமிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் கைது!.. அதிர்ச்சி சம்பவம்..!!

பல மாநிலங்களில் இருந்து சிறுமி பெண்களை கடத்தி; விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் கைது... அதிர்ச்சி சம்பவம்..!!

Advertisement

14 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய மிகப்பெரிய விபசார கடத்தல் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஐதராபாத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் காவல் துறையினர் இதுவரை இந்த வழக்கில் 18 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமிகள் மற்றும் பெண்களை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அசாம், ஆகிய மாநிலங்களில் இருந்தும், வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து கடத்தியுள்ளனர். 

இந்த கடத்தல் கும்பல், இணையதளம் மூலம் விளம்பரம் செய்து வந்துள்ளனர். பெண்களை விபச்சார தொழில் ஈடுபடுத்த ஹைதராபாத் பெங்களூர் டெல்லி போன்ற நகரங்களில் கால் சென்டர் நடத்தி வந்துள்ளனர். மேலும், கால் சென்டர், வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டுள்ளனர். கடந்த சில வருடங்களில், 1400 சிறுமிகள் மற்றும் பெண்களை விபச்சார தொழிலுக்கு கடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சைபராபாத் மற்றும் ஐதராபாத் எல்லைக்குள் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்கள் 70 சதவீதம் ஐதராபாத் மற்றும் சைபராபாத்தில் உள்ள கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். இந்த குற்றவாளிகள் இதுவரை 14,190 சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்காக நல்ல வேலை, எளிதாக பணம் சம்பாதிக்கலாம், ஆடம்பரமாக வாழலாம் எனக் கூறி பெண்களை கடத்தி உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#prostitution #Hyderabad #police arrest #whats app
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story