×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரசாதமாக மயக்க மருந்து.. கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு நடந்த சம்பவம்..! காத்திருந்த அதிர்ஷ்டம்..!!

பிரசாதமாக மயக்க மருந்து.. கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு நடந்த சம்பவம்..! காத்திருந்த அதிர்ஷ்டம்..!!

Advertisement

கண்காட்சிக்கு சென்ற இடத்தில், கோயில் பிரசாதம் என கூறி மயக்க மருந்து கொடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் மாவட்டம், முபாரிக்பூர் கிராமத்தில் ஒரு கண்காட்சிநிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அத்துடன் கண்காட்சியானது கோவிலுக்கு அருகே நடத்தப்பட்டதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கண்காட்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவில் பிரசாதம் எனக்கூறி அங்குள்ள அனைவருக்கும் குளிர்பானம் வழங்கியுள்ளார்.

இதை பலர் அருந்திய நிலையில், சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்து விழுந்தனர். இதனைக்கணடு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக மயக்கமடைந்த 28 நபர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இது குறித்து காவல்துறையினரிடம் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் விசாரணை செய்ததில் கோவில் பிரசாதம் என்று வழங்கப்பட்ட குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்தது ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "குளிர்பானம் என கூறி மக்களுக்கு, மயக்க மருந்து கொடுத்த மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். கண்காட்சிக்கு வந்தவர்களின் உடமைகள் எதுவும் திருடப்படவில்லை. அனைத்தும் அப்படியே உள்ளன" என்று கூறியுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் மயக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை என்றும், அவர்களின் உடல் நிலையானது எப்பொழுதும் போலவே உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அனைவருக்கும் எதற்காக அந்த மர்ம நபர் மயக்க மருந்து கொடுத்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#haryana #gurukram #excursion #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story