நொடிப்பொழுதில் போகவிருந்த உயிர்.! தண்டவாளத்தை கடக்கும் பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காவலர்.! ஷாக் வீடியோ.!
நொடிப்பொழுதில் போகவிருந்த உயிர்.! தண்டவாளத்தை கடக்கும் பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காவலர்.! ஷாக் வீடியோ.!
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் கடந்த சனிக்கிழமையன்று, வயதான பெண்மணி ஒருவர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதவிருந்த நிலையில் ரயில்வே போலீஸ் அதிகாரி அவரை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த ரயில் நிலையத்தில் வயதான பெண்மணி ஒருவர் சிவப்பு புடவை அணிந்துகொண்டு ரயில் வேகமாக வருவதை அறியாமல் மெதுவாக நடந்துவந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். இதனை அருகிலிருந்து கவனித்த ரயில்வே காவலர் ஒருவர் சட்டென பாய்ந்து அந்தப் பெண்ணை பிளாட்பாரத்துக்கு இழுத்துபோட்டு அவரது உயிரைக் காப்பாற்றினார்.
சில நொடிகள் தாமதித்திருந்தால் கூட அந்த பெண் ரயிலில் சிக்கி விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும். ஆனால் ரயில்வே காவலரின் துணிச்சலான செயலால் அந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகளை ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், ஆர்பிஎப் வீரர்களின் விழிப்புணர்வு மற்றும் உடனடி நடவடிக்கையால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. அனைவரும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு செல்ல புட் ஓவர் பிரிட்ஜைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.