அழகுநிலைய பெயரில் பாலியல் தொழில்.. ஹைடெக் விபச்சாரத்தில் களமிறங்கிய கும்பல்.. 6 அழகிகள் மீட்பு..!
அழகுநிலைய பெயரில் பாலியல் தொழில்.. ஹைடெக் விபச்சாரத்தில் களமிறங்கிய கும்பல்.. 6 அழகிகள் மீட்பு..!
தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப நாங்களும் அப்டேட் ஆகிவிட்டோம் என்ற பெயரில், புதுச்சேரியில் ஹைடெக் விபச்சாரம் நடப்பது தெரியவந்துள்ளது.
வெளிமாநில சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் விபச்சாரத்தை கட்டுப்படுத்த, புதுச்சேரி மாநில காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுற்றுலாவுக்கு வரும் பயணிகளின் செல்போன் எண்களை வைத்து, விபச்சார தொழிலில் ஈடுபடும் பெண்கள் காந்தக்குரலால் ஆடவர்களை மயக்கும் நிலை மாறி, ஹைடெக் விபச்சாரம் நடந்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இதனைப்போல தங்களின் வலையில் சிக்கும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களின் உல்லாச வீடியோவை பதிவு செய்து பணம்பறிக்கும் செயலும் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் நெல்லித்தோப்பு அண்ணாநகர் பகுதியில் 17 வயது சிறுமியை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக 40 பேரின் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாண்டிச்சேரியில் உள்ள சாரம் காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக கோரிமேடு காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அழகு நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சார தொழில் நடப்பது உறுதியானது.
அழகு நிலைய உரிமையாளரான வானரப்பேட்டையை சேர்ந்த ராஜா (வயது 28) என்பவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 6 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், விபச்சார கும்பல் ஹைடெக் தொழில் நுட்பத்தின் மூலமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.