நெஞ்சை உலுக்கும் சோகம்.. பாசத்தாய் மகளின் பிறந்தநாள் கொண்டாடிய மறுநாள் பலியான பரிதாபம்...!
நெஞ்சை உலுக்கும் சோகம்.. பாசத்தாய் மகளின் பிறந்தநாள் கொண்டாடிய மறுநாள் பலியான பரிதாபம்...!
மகளின் பிறந்தநாளை சிறப்பித்து மறுநாள் காலையில் சமைக்க முயற்சித்த தாய், உடலில் தீப்பற்றி பரிதாபமாக பலியாகினர்.
புதுச்சேரியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (வயது 35). இதே பகுதியை சார்ந்தவர் அனிதா (வயது 31). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்டார். அனிதாவிற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக வேறொருவருடன் திருமணம் நடந்த நிலையில், அவரின் முதல் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
அவரின் மூலமாக அனிதாவிற்கு மகன், மகள் உள்ளனர். 2-ம் திருமணத்திற்கு பின்னர் அனிதாவுக்கு ஜெயக்குமார் மூலமாக ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. தம்பதிகள் பல இடங்களுக்கு சென்று தங்கியிருந்து கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருவார்கள்.
கடந்த 15 கடலுக்கு முன்பு சென்னிமலை அடிவாரத்தில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தவாறு கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 26-ம் தேதியின் இரவில் அனிதா மகள் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு உறங்கியுள்ளார்.
மறுநாள் காலையில் அவர் சமையல் செய்ய அடுப்பை பற்றவைத்தபோது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்துள்ளது. தீ அனிதாவின் சேலை முழுவதும் பரவ, உடலில் தீப்பற்றி அனிதா அலறியுள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஜெயக்குமார் அனிதாவின் மீது நீரூற்றி தீயை அணைத்துள்ளார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து சென்னிமலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.