அளவுக்கு அதிமாக சரக்கடித்த இளம்பெண் பரிதாப பலி.. பாண்டிச்சேரியில் சோகம்.!
அளவுக்கு அதிமாக சரக்கடித்த இளம்பெண் பரிதாப பலி.. பாண்டிச்சேரியில் சோகம்.!
மதுபானத்திற்கு அடிமையான பெண்மணி அளவுக்கு அதிகமாக குடித்ததால், போதை மயக்கத்திலேயே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உருளையன்பேட்டையில் வசித்து வருபவர் சாந்தி (வயது 55). இவரின் கணவர் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். சாந்திக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இவர் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார். மேலும், அவருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று மதுபானம் அருந்தியவர், அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். மதுபோதையுடன் மீன்மார்கெட் பகுதியில் உறங்கியுள்ளார். அப்போது, போதையிலேயே இறந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உருளையன்பேட்டை காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.