தேர்தல் களத்தில் பளார் என அறை விழுந்தது! உண்மையை ஒப்புக்கொண்ட பிரகாஷ் ராஜ்!
prakash raj talk about bjp
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் கில்லி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார், மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் மட்டுமின்றி, சமூகத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர். மேலும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். பல கிராமங்களை தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறும் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூர் தொகுதியில் விசில் சின்னத்திற்கு சுயேச்சையாக நின்று போட்டியிட்டார்.
ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பி.சி.மோகன் வெற்றி பெற்றார். பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து தெரிவித்த பிரகாஷ்ராஜ், தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது என தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த 6 மாதமாக பெங்களூரு முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். ஆனால் மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன். நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். சுயேட்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக கூறுகிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.