இதெல்லாம் பத்தாது.. மண்டபத்திற்கு வராமல் திருமணத்தை நிறுத்திய மணமகள்.! என்ன நடந்தது? அதிர்ச்சி காரணம்!!
இதெல்லாம் பத்தாது.. மண்டபத்திற்கு வராமல் திருமணத்தை நிறுத்திய மணமகள்.! ஏன்? அதிர்ச்சி காரணம்!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள போச்சாரம் என்ற பகுதியில் வசித்து வந்த வாலிபர் ஒருவருக்கு அஸ்வரா பேட்டையை சேர்ந்த பழங்குடியின இளம்பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் மணமகன் வீட்டார் பத்ரி குடேம் பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
பழங்குடியின வழக்கப்படி மணப்பெண்ணுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும். அதனால் மணமகளுக்கு ரூ.2 லட்சம் வரதட்சணையாக மணமகன் வீட்டார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மணமகன் தயாரான நிலையில் திருமணம் மேடைக்கு வருகை தந்துள்ளார்.
ஆனால் மணமகள் வீட்டார் யாருமே திருமண மண்டபத்திற்கு வருகை தரவில்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினர் மணமகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவர்களிடம் விசாரித்துள்ளனர். இந்நிலையில் மணமகள் கூடுதல் வரதட்சனை கொடுத்தால்தான் மண்டபத்திற்கு வந்து திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
மணமகன் வீட்டார் எவ்வளவு கெஞ்சி பேசியும் மணமகள் சமாதானம் அடையவில்லை. இந்நிலையில் இது குறித்து மணமகன் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள் பேச்சுப்வார்த்தை நடத்தியும் ஒத்து வராத நிலையில் இரு தரப்பினரும் திருமணத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.