#BigBreaking: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் காலமானார்; கண்ணீரில் பாஜக தொண்டர்கள்.!
#BigBreaking: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் காலமானார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! கண்ணீரில் பாஜக தொண்டர்கள்.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் தனது 100 வயதில் காலமானார்.
பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தை பலமுறை ஆட்சி செய்து, இந்தியாவுக்கு பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (Heeraben Modi). இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஹீராபென், சிகிச்சைக்காக அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த விஷயத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் தங்கியிருக்கிறது... துறவியின் பயணமும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளமும், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கிய அந்த மும்மூர்த்திகளை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.
அவருடைய 100வது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயம் சொன்னார், எப்போதும் நினைவுக்கு வரும், புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள், அதாவது புத்திசாலித்தனத்துடன் வேலை செய்து தூய்மையுடன் வாழ்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஹீராவுடைய 100ம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.