பிரதமர் மோடியின் பயணம் திடீர் இரத்து.. இடைமறித்த போராட்டக்குழு., போன் எடுக்காத முதல்வர்..!
பிரதமர் மோடியின் பயணம் திடீர் இரத்து.. இடைமறித்த போராட்டக்குழு., போன் எடுக்காத முதல்வர்..!
பிரதமர் மோடி செல்லும் வழியை போராட்டக்குழு இடைமறித்ததால் பயண பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு அவர் டெல்லிக்கு திரும்பி சென்றார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸிப்பூர் ஹுசைனிவாலா நகரில் நடைபெறவிருந்த ரூ.1000 கோடி முதலீடு திட்டங்களுக்கான வளர்ச்சிப்பணிகள் தொடர்பான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள அங்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். பிரதமர் மோடியின் வாகனம் அங்குள்ள பாலத்தில் செல்கையில், போராட்டக்குழுவால் முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் இடைமறிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் வாகனத்தை நடுவழியில் நிறுத்தியுள்ளனர். பிரதமர் மோடி செல்லும் வழியை இடைமறித்த போராட்டக்குழுவினர், மேற்படி செல்ல இயலாத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காரிலேயே காத்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநில முதல்வருக்கு தொடர்பு கொண்டு போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆலோசனை கூற முற்பட்டுள்ளார்.
ஆனால், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமரின் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார். 20 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர் மோடி, வளர்ச்சித்திட்ட தொடக்க பணிகளில் கலந்துகொள்ளாமல் டெல்லிக்கு திரும்பியுள்ளார். பிரதமரின் பயண வழியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.