"அந்த மாதிரி பெண் கிடைப்பது ஒரு வரம்" பெண்களை கேலி செய்த பேராசிரியர் மீது நடவடிக்கை
Professor criticizing about virginity of girls
பெண்களின் கன்னித் தன்மையையும் முத்திரை உடைக்கப்படாத பாட்டிலும் ஒன்று; பெரும்பாலான ஆண்களுக்கு கன்னித்தன்மையுடன் பெண் கிடைப்பது மிகவும் அரிதான விசயம் என பெண்களை கொச்சைப்படுத்திய பேராசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கனக் சர்கார் என்பவர் சர்வதேச உறவுப் பிரிவில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். சமூக வலைதளமான முகநூலில் மூலம் இவர் பிரபலமாக இருந்துள்ளார். அத்துடன் தொடர்ந்து பதிவுகள் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் ஒரு பதிவில் கனக் சர்கார், "பல ஆண்கள் முட்டாள்களாகவே உள்ளனர். அவர்களுக்கு பெண்களின் கன்னித்தன்மை பற்றி கண்டுபிடிக்க தெரிவதில்லை. ஒரு கன்னிப்பெண் என்பவள் முத்திரை உடைக்கப்படாத பாட்டில் அல்லது பிர்க்கப்படாத பாக்கெட்டை போன்றவள். நீங்கள் யாராவது முத்திரை (சீல்) உடைக்கப்பட்ட குளிர்பான பாட்டிலையோ அல்லது பிரிக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்க விரும்புவீர்களா?
அது உங்கள் மனைவிக்கும் பொருந்தும். ஒரு பெண் உடல்கூற்றின் படி முத்திரையுடன் படைக்கப்பட்டுள்ளார். அதனால் ஒரு கன்னிப்பெண் என்பவள் முத்திரை உடைக்கப்படாத பாட்டிலுக்கு சமமானவர். ஒரு கன்னித்தன்மையுடன் இருந்தால் அவளது சுற்றுப்புரம், சமூகம், கலாச்சாரம் போன்றவை சிறப்பாக உள்ளதாக அர்த்தம். ஆனால் இங்கு பல ஆண்களுக்கு கன்னித்தன்மை உடைய பெண்கள் கிடைப்பது ஒரு வரமாக உள்ளது” என பதிந்திருந்தார்.
அது மாணவர்களிடையே கடும் கோபத்தை எழுப்பியது. ஒரு ஆசிரியர் இவ்வாறு பெண்களை பற்றி கீழ்த்தரமாக பதிந்தது குறித்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு புகார் அளித்தனர். அத்துடன் பல பெண்கள் நல அமைப்புக்களும் கனக் சர்காரின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதை ஒட்டி ஜாதவ்பூர் பல்கலைக்கழக நிர்வாகம் சர்காரை ஆசிரியர் பணியில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.