×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. முகேஷ் அம்பானியின் மகளோட தனிப்பட்ட சொத்துமதிப்பு மட்டும் இவ்வளவா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க.!

property of imukesh ambani daughter isha ambani

Advertisement

இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி,இவர் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலின் என்பவரை அடுத்த மாதம் திருமணம் செய்யவுள்ளார்.

இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.மேலும் இதற்கான செலவு மட்டும் 26 கோடி ரூபாய் என தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் முகேஷ் அம்பானிக்கு தனது மகள் இஷாவுக்கு திருமண பரிசாக தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஆடை மற்றும் சவுதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட காரினை பரிசளிக்கவுள்ளார். 

இத்தகைய பல ஆடம்பரங்களுக்கு சொந்தக்காரரான இஷா அம்பானி ஒரு சிறந்த பெண் தொழிலதிபர் ஆவார்.இவர்  ஆசிய பெண்கள் வணிகர்களில் 12ம் இடத்தில் உள்ளார்.

இஷா அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குனராக உள்ளார். ஜியோவின் போர்டு உறுப்பினராக 2014-ம் ஆண்டு பணியில் சேர்ந்த  இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தினை நிர்வகித்து வருகிறார். மேலும் 2015 ஆம் ஆண்டு முதல் தங்கள் ஜியோ வணிகத்தினை இஷா கவனித்து வருகிறார்.

இவ்வாறு பல வர்க்கத்தினை கவனித்து வரும் இஷா அம்பானியின்  தனிப்பட்ட மொத்த சொத்து மதிப்பு மட்டும் 4,710 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mukesh ambani #isha ambani #property
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story