பர்தாவை கழற்றினால் மட்டுமே நாங்கள் காவி துண்டை கழற்றுவோம்.! தீவிரமாகும் பர்தா Vs காவி துண்டு விவகாரம்.!
பர்தாவை கழற்றினால் மட்டுமே நாங்கள் காவி துண்டை கழற்றுவோம்.! தீவிரமாகும் பர்தா Vs காவி துண்டு விவகாரம்.!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப் புராவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 7ஆம் தேதி மாணவிகள் ஹிஜாப் அணிந்தபடி வந்து தங்களுடைய உரிமையை நிலைநாட்டக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவிகளுக்கு எதிராக காவி நிற துண்டை தோளில் போட்டுக் கொண்டு சில மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தனர்.
முஸ்லிம் மாணவிகள் பர்தாவை கழற்றினால் மட்டுமே நாங்கள் காவி துண்டை கழற்றுவோம் என்று தெரிவித்தனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் இன்று காவி சால்வை அணிந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் கூறுகையில், கர்நாடகாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் பர்தா மற்றும் காவி துண்டு அணிந்து வருவது தவறு. அரசு யாருக்கும் ஆதரவாக இல்லை. அனைத்து மாணவர்களும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.