தக்காளி விற்று 2.80 கோடி லாபம் ஈட்டிய தம்பதி..!!
தக்காளி விற்று 2.80 கோடி லாபம் ஈட்டிய தம்பதி..!!
தமிழகம் மட்டுமில்லாமல் பல வட மாநிலத்திலும் மழை காரணமாக வரத்து இல்லாமல் தக்காளியின் விலையானது அதிகரித்து வருகிறது. இன்று வரை அதன் அலை குறையாமல் ஏறி கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததால் பலர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் விவசாயி ஒருவர் அதீத லாபம் பெற்றுள்ளார். புனே என்னும் வட மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வர் காய்வர் என்ற 36 வயது விவசாயி மற்றும் அவர் மனைவி ஜூன்னர் ஆகியோர் இணைந்து தக்காளியை விற்று இதுவரை 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் ஈட்டியுள்ளனர்.
மூன்றரை கோடி வரை தக்காளி விற்க அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆறேழு ஆண்டுகளாக தக்காளி விதைத்து பலமுறை பல்லாயிரக்கணக்கில் நஷ்டம் அடைந்ததற்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.