அமலாக்கத்துறை திடீர் ரெய்டு.. பணம், ஆவணங்கள் பறிமுதல்.. முதல்வரின் உறவினர் கைது.!
அமலாக்கத்துறை திடீர் ரெய்டு.. பணம், ஆவணங்கள் பறிமுதல்.. முதல்வரின் உறவினர் கைது.!
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப். 20 ஆம் தேதி நடைபெறுகிறது. 177 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல் முடிவுகள், மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் ஆட்சியை தக்கவைக்க காங்கிரசும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக, ஆம் ஆத்மீ கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. சரண்ஜித் சிங்கின் உறவினர்கள் புபிந்தர் சிங், கூட்டாளி சந்தீப் குமாருக்கு சொந்தமான வீடு உட்பட 10 இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் ரூ.6 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், பணமோசடி வழக்கில் பஞ்சாப் முதல்வரின் உறவினர் புபிந்தர் சிங் ஹனி நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.