இந்தியா விரையும் ரஃபேல் போர் விமானங்கள்; பலப்படுத்தப்படும் பாதுகாப்பு.!
Rafoa Airlines come to India soon
இந்தியாவின் பாதுகாப்பு கருதி 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்சிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் சிறப்பு கோரிக்கையை ஏற்று விரைவில் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
முதல் கட்டமாக ஜூலை 27-ம் தேதி பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு வருகை தர உள்ளது.
இதனைத்தொடர்ந்து அம்பாலா விமானப்படைத்தளம் மற்றும் அதனை சுற்றியுள்ள துல்கோட், கர்னாலா, பால்தேவ் நகர், பஞ்ச்கோரா விமானப்படைத் தளங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த விமானப் படைத் தளங்களை சுற்றி ட்ரோன் கேமரா பறப்பதற்கு போட்டோஷூட் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் அமர்ந்து பயணிக்கக்கூடிய மூன்று விமானங்களும் இரண்டு நபர் அமர்ந்து பயணிக்கக்கூடிய இரண்டு விமானங்களையும் இந்திய விமானப் படையின் தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதவுரியா வரவேற்பார். சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்திச் செல்லும் இந்த விமானங்கள் இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில் இந்தியாவின் லடாக் பகுதியில் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.