இந்தியாவின் ராஜாவான பிரதமர் நரேந்திர மோடி.. ஒப்புக்கொண்ட ராகுல்காந்தி., பரபரப்பில் அரசியல்களம்.!
இந்தியாவின் ராஜாவான பிரதமர் நரேந்திர மோடி.. ஒப்புக்கொண்ட ராகுல்காந்தி., பரபரப்பில் அரசியல்களம்.!
எங்களை சிறைவைத்தாலும் மக்களுக்கான தொண்டு செய்யும் உறுதிப்பாட்டில் இருந்து எங்களை எப்போதும் உடைக்க இயலாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
நேஷ்னல் ஹெரால்ட் முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2-வது நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சி எம்.பி., நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும், பாராளுமன்றத்தினை நோக்கி பேரணி செல்லவிருந்த நிலையில், அவர்களை விஜய் சவுக் பகுதியில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 6 மணிநேரத்திற்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தி போராட்டம் தொடர்பாக ட்விட் பதிவு செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், "வேலையின்மை, பணவீக்கம், ஜி.எஸ்.டி., அக்னிபாத் உட்பட எந்த பிரச்சனை குறித்து யார் எந்த கேள்வி கேட்டாலும் அவர்களை சிறையில் அடைக்க நாட்டின் ராஜா உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்றத்திலும் விவாதத்திற்கு அனுமதிப்பது இல்லை. வெளியே எங்களை கைது செய்கிறார்கள். என்னை சிறை வைத்தாலும் மக்களுக்கான தொண்டு செய்யும் உறுதிப்பாட்டை உடைக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விசயத்திற்கு கருத்து தெரிவிக்கும் பாஜகவினர், "பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தியே ராஜ என ஒப்புக்கொண்டுள்ளார். அவர் யாரையும் சிறைபிடிக்க சொல்வது இல்லை. அவர்களின் செயலுக்கு சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாகிறார்கள். இதில், யார் என்ன செய்ய இயலும்" என்று தெரிவிக்கின்றனர்.