×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொங்கு பாலம் விபத்து எதிரொலி: பழமையான பாலங்களை பராமரிப்பு பணி செய்ய ரயில்வே துறை முடிவு..!

தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து எதிரொலி: பழமையான பாலங்களை பராமரிப்பு பணி செய்ய ரயில்வே துறை முடிவு..!

Advertisement

சமீபத்தில் குஜராத்தில் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தது, அந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் 130-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மச்சு ஆற்றின் அழகை சுற்றுலாவாசிகள் இந்த பாலத்திற்கு சென்று கண்டுகளிப்பது வழக்கம். 

இந்த பாலம் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சரியாக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றும், மேலும் துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள், அதிக எடை போன்றவை விபத்துக்கான காரணிகளாக கருதப்படுகின்றன. எனவே, வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க 100 வருடங்கள் கடந்த  பழமையான பாலங்களை ஆய்வு செய்ய வேண்டியது  அவசியம். 

இதேபோன்று, ரெயில்வே துறையிலும், 100 வருடங்கள் பழமையான பாலங்கள் நிறைய உள்ளன. அவற்றின் நம்பகதன்மையை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். 100 ஆண்டுகள் கடந்த 38,850 ரெயில்வே பாலங்கள் நாட்டில் இருக்கின்றது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்பு கூறியிருந்தது. இந்த பாலங்களை தொடர்ந்து கண்காணித்து, பராமரிக்கும் பணியை ரெயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் இந்த பாலங்களை ரயில்வே நிர்வாகம் வருடத்திற்கு இரு முறை ஆய்வு செய்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#railway #Indian Railways #railway bridge #Maintenance Work #Morbi Bridge Accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story