மே 3 வரை ரயில் சேவை ரத்து.. டிக்கெட்டுக்கான தொகையினை திரும்ப பெறுவது எப்படி - IRCTC தகவல்!
Railways, full refund will be provided automatically by IRCTC.
இந்தியாவில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இந்நோயால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 350க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்திய பிரதமர் மோடி அவர்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதனை அடுத்து கடந்த வாரம் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று இரயில்வே துறை அறிவித்தது.
இதனால் மக்கள் இரயில் பயணத்திற்கான முன்பதினை பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி அவர்கள் லாக்டவுனை மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக உத்தரவிட்டுள்ளார். இதனால் இரயில் சேவைகளும் மே 3 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டது.
தற்போது இந்தியன் இரயில்வே துறை முன்பதிவு செய்த நபர்களின் பணத்தை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கே திருப்பி அனுப்புவதாக அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்தவர்கள் யாரும் டிக்கெட்டை ரத்து செய்ய தேவையில்லை. புக் செய்தவர்களின் முழு பணமும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று இரயில்வே துறை அறிவித்துள்ளது.