அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தோர் 18 பேருக்கு ஒரு கண்ணில் பறிபோன பார்வை; ராஜஸ்தானில் அதிர்ச்சி.!
அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தோர் 18 பேருக்கு ஒரு கண்ணில் பறிபோன பார்வை; ராஜஸ்தானில் அதிர்ச்சி.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனை, அம்மாநிலத்தில் மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். அங்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்த 18 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோயுள்ளது.
இவர்களில் பெரும்பாலான நபர்கள் ராஜஸ்தான் மாநில அரசின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,
"கடந்த ஜூன் 23ல் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஜூலை 5ம் தேதி வரையில் எனக்கு பார்வை நன்றாக இருந்த நிலையில், 6ம் தேதியில் பார்வை மங்கத்தொடங்கி, 7ம் தேதி முற்றிலும் அது பறிபோனது.
அதற்குப்பின் மீண்டும் மருத்துவமனையில் அனுமதியாகி, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை செய்தலும் பார்வை திரும்பவில்லை. தொற்று காரணமாக பார்வை பறிபோனதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்" என தெரிவித்தார்.