தலித் திருமண ஊர்வலத்தில் 15 நிமிடம் கல்வீச்சு.. அரங்கேறிய வன்முறை வெறியாட்டம்..!
தலித் திருமண ஊர்வலத்தில் 15 நிமிடம் கல்வீச்சு.. அரங்கேறிய வன்முறை வெறியாட்டம்..!
தலித் சமூகத்தை சார்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதல் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே உள்ள கிராமம் கோட்புட்லி. இந்த கிராமத்தை சார்ந்த ஹரிபால் பாலாய் என்ற நபரின் மகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்துள்ளது.
இவர் தலித் சமூகத்தை சார்ந்தவராக இருந்த நிலையில், ஊர்வலம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி வாங்கி ஊர்வலம் நடத்தியுள்ளார். காவல் துறையினரும், திருமணத்திற்கு பின்னர் நடந்த ஊர்வலத்தின் போது பாதுகாப்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஊர்வலத்தில் திடீரென புகுந்த மர்ம நபர்கள், மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்த நிலையில், வெள்ளிக்கிழமை 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராம்குமார் உறுதி செய்துள்ளார்.
ஊர்வலத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் 15 நிமிடம் கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.