சந்தேகம்.. ஆடையை கிழித்து, தலைமுடியை வெட்டி.., விதவைப்பெண்ணை மனிதாபிமானமின்றி தாக்கிய பெண்கள் கூட்டம்..!
கள்ளஉறவு இருப்பதாக எண்ணி, விதவை பெண்ணை மனிதாபிமானமின்றி தாக்கிய பெண்கள் கூட்டம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தில் பெண்மணி ஒருவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார்.
பெண்மணி தனது 5 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆணுக்கும் தகாத உறவு இருப்பதாக ஊர் பெண்களுக்கு இடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பெண்கள் கூட்டமாக திறந்து டெய்லராக பணியாற்றி வரும் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கி ஆடையை கிழித்து, தலை முடியை வெட்டி மரத்தில் கட்டி வைத்தனர்.
இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.