×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்ப அட்டையில் அதிரடி மாற்றம்! உங்கள் வீட்டில் இதெல்லாம் இருந்தால் மானியம் ரத்து

rasan card checking

Advertisement

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. 

வசதி படைத்தவர்கள், மானியத்தில் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. அதுமட்டுமின்றி போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே ஆய்வுப் பணியும் தொடங்கியுள்ளது.

அதன்படி முன்னுரிமைப் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன:

1. குடும்பத்தில் ஒரு நபராவது வருமான வரி செலுத்துபவராக இருத்தல்.
2. குடும்பத்தில் ஒரு நபராவது தொழில் வரி  செலுத்துபவராக இருத்தல்.
3. 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயியை கொண்ட குடும்பம்.
4. மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பம்.
5 .  4 சக்கர வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள குடும்பம்.
6 . ஏசி வைத்திருக்கும் குடும்பம்.
7 . 3 அல்லது அதற்கும் மேல் அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம். 
8. வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம். 
9. ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்பம்.   

அரசின் விதிப்படி, மேற்கூறியவற்றில்  ஏதாவது ஒன்று இருந்தாலும் இந்தக் குடும்பங்கள் மானியம் பெற தகுதியில்லாததாக கணக்கிடப்படுகிறது. இக்குடும்பங்கள் முன்னுரிமை பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகளை பயன்படுத்தினால் தற்போது அது மாற்றப்படும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kudumpa aittai #checking
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story