புறப்பட தயாராக இருந்த விமானம்! கடைசி நிமிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி! கடுப்பான பயணிகள்.
Rat entered into air India flight and flight delayed for 12 hours
ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஓன்று பறக்க தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்திற்குள் ஏறி அமர்ந்துவிட நிலையில் திடீரென எலி ஓன்று விமானத்திற்குள் நுழைந்துள்ளது.
எலி விமானத்திற்குள் நுழைந்ததை பார்த்துவிட்ட விமான ஊழியர்கள் அந்த எலியை பிடிக்க முயற்சி செய்தனர். பலர் போராடியும் அந்த எலியை பிடிக்க முடியவில்லை. விமானம் புறப்பட வேண்டிய நேரத்தை கடந்தும் எலியை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
ஒருவழியாக ஊழியர்கள் பலமணிரம் போராடி அந்த எலியை பிடித்தனர். இந்நிலையில் காலையில் புறப்படவேண்டிய விமானம் சுமார் 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஒரு எலியால் விமானம் 12 மணி நேரம் தாமதமானது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.