2000 நோட்டுகளை மாற்ற கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்..! ஆர்பிஐ அறிவுரை.!!
2000 நோட்டுகளை மாற்ற கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்..! ஆர்பிஐ அறிவுரை.!!
இந்தியாவில், வெகு விமர்சையாக பேசப்பட்ட தலைப்புகளில் ஒன்று தான் ரூ.2,000 நோட்டு செல்லாது. இந்த நோட்டு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என்று சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் அறிவித்திருந்தது. இதுகுறித்த பேச்சு தான் இணையம் முழுவதும் காணப்பட்டது,
இதற்கிடையே, ரூ.2,000 நோட்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு நாடு முழுவதும் அனைவரும் ஏற்கனவே தயாராகி உள்ளனர். அதிலும் குறிப்பாக, சிறிய முதல் பெரிய வியாபாரிகள் தங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சியில் இப்போதே இறங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், ரூபாய் 2000 நோட்டுகளை மாற்றுவதற்காக செப்டம்பர் 30 தேதி வரை காத்திருக்க வேண்டாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. மேலும், வருகின்ற மூன்று மாதத்தில் மாற்றி கொள்ள அறிவுரைத்துள்ளது. மேலும், இதுவரை புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகளில் 76 சதவீத நோட்டுகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.