ரூ.20, ரூ.500 கள்ளநோட்டுகள் அதிகரிப்பு; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.. மக்களே ரூ.500 வாங்கும்போது கவனம்..!
ரூ.20, ரூ.500 கள்ளநோட்டுகள் அதிகரிப்பு; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.. மக்களே ரூ.500 வாங்கும்போது கவனம்..!
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பழைய ரூபாய் நோட்டுகள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி ரூ.10, ரூ.20, ரூ.100, ரூ.500 நோட்டுகள் அச்சடித்து வழங்கப்பட்டன. இவற்றை கள்ளநோட்டுகள் பிரச்சனை முன்பு அதிகளவு இருந்தாலும், தற்போது குறைந்துவிட்டன.
ஆனால், இதுகுறித்த எச்சரிக்கை விடுத்துள்ள ஆர்.பி.ஐ ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.2000 மதிப்பிலான கள்ளநோட்டுகள் 11.6 விழுக்காடு குறைந்துள்ளது. அதே வேளையில் ரூ.20 நோட்டுகள் 8.4%, ரூ.500 நோட்டுகள் 14.4% என்ற அளவில் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் ரூ.500 மற்றும் ரூ.20 நோட்டுகளை வாங்கும்போது கவனமாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.