#Breaking: ரூ.2000 நோட்டுகளை மாற்றமா இன்னும் வச்சிருக்கீங்களா? - காலக்கெடு நீட்டிப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: ரூ.2000 நோட்டுகளை மாற்றமா இன்னும் வச்சிருக்கீங்களா? - காலக்கெடு நீட்டிப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இந்தியா முழுவதும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் கொண்டு வரப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சமீபத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதனை வங்கிகள் வாயிலாக மாற்றிக்கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. அதற்கான காலக்கெடுவாக செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வரை அச்சடிக்கப்பட்டதில் 96% ரூ.2000 நோட்டுகள் திரும்பி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அக். 07ம் தேதி வரை பணத்தை மாற்ற அனுமதி வழங்குவதாக காலக்கெடுவை நீடித்து அறிவித்து இருக்கிறது.
கடந்த 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுகள், 2023 மே மாதம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்பணத்தை மாற்றம் செய்ய செப். 30ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவாரம் அனுமதி வழங்கப்பட்டு அக்.07, 2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.