மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்.! ரயில்வேக்கு கிடைத்த வருவாய் இத்தனை கோடிகளா!!
மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்.! ரயில்வேக்கு கிடைத்த வருவாய் இத்தனை கோடிகளா!!
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 58 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், திருநங்கைகள் மூத்த குடிமக்களாக கருதப்பட்டு அவர்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த சலுகைகள் கொரோனோ ஊரடங்கு சமயத்தில் நீக்கப்பட்டது. பின் அந்த சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மூத்த குடிமக்கள் மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தை செலுத்தி பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை ரத்து செய்ததால், ரயில்வே ஈட்டிய வருவாய் குறித்த தகவலை பெற்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம், மார்ச் 20, 2020 முதல் இந்த ஆண்டு ஜனவரி 31, 2024 வரை 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ரயில்வே துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.