பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!
Rohit sharma blessed with girl baby
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவிற்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், தன்னுடைய முதல் குழந்தையை வரவேற்க முடியாமல் ரோஹித் சர்மா இந்தியக் கிரிக்கெட் அணிக்காக ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறார். ஆனால், குழந்தை பிறந்தத் தகவல் கிடைத்த உடன் சிட்னியிலிருந்து மும்பைக்கு விமானம் ஏறியுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.