கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5000 ஓய்வூதியம் மற்றும் இலவச கல்வி.! முதலமைச்சர் அதிரடி.!
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகையும், இலவச கல்வி
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகையும், இலவச கல்வியும் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்குகளும், முழுநேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் பல லட்சம் மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டும், பல ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' கொரோனா தொற்றால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். முதியவர்கள் தங்களை இதுவரை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளைகளை இழந்து ஆதரவின்றி நிற்கிறார்கள்.
எனவே, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் பாதுகாவலர்களை இழந்த குடும்பத்தினருக்கும் மாதம் ரூ 5000 ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளை அரசே செய்து கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.