கொரோனா மருந்து கையில் இருந்தும் இந்தியாவின் உதவியை கேட்டுநிற்கும் ரஷ்யா..! ஏன் தெரியுமா.?
Russia seeks indias Help for Corona phase 3 test
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியர்களிடம் செலுத்தி சோதனை செய்வதற்காக இந்திய அரசின் உதவியை ரஷ்யா நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுவரை அதிகாரபூர்வமான தடுப்பூசி கண்டறியப்படவில்லை. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் சோதனையில் இறங்கியுள்ளது.
இதில் ரஷ்யா தாங்கள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாகவும், விரைவில் மக்களுக்கு செலுத்த இருப்பதாகவும் அண்மையில் அறிவித்திருந்தது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராச்சி நிறுவனமும் இணைந்து ஸ்புட்னிக்-v என்ற உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்தது.
ஆனால் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி மீது உலக நாடுகள் சந்தேகம் எழுப்பியது. மேலும் ஸ்புட்னிக்-v தடுப்பூசியானது இரண்டுக்கட்ட பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான மூன்றவத்துக்காட்ட பரிசோதனை இதுவரை நடத்தப்படவில்லை.
இந்நிலையில்தான் ரஷ்யா இந்தியாவின் உதவியை நாட்டியுள்ளது. ஸ்புட்னிக்-v தடுப்பூசியின் மூன்றாவதுகட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த ரஷ்யா இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், "ரஷ்யா தாங்கள் கண்டுபிடித்த தடுப்பூசியின் சில தகவல்களை இந்தியாவிடம் பகிர்ந்துள்ளதாகவும், இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்".