அடேங்கப்பா , மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு இவ்வளவு சம்பளமா? வெளியான அதிரவைக்கும் தகவல்.!
salary to modi make up women
சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு பெண் மேக்கப் போடுவது போன்ற ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து மோடிக்கும் மேக்கப் போடும் அந்த பெண்ணிற்கு ரூ.15 லட்சம் சம்பளம் எனவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் அந்த பெண், பிரதமரின் மெழுகு சிலை உருவாக்க அவரை அளவெடுக்க வந்த பெண் என்றும், ஒருசிலர் அவர் மோடிக்கு மேக்கப் போடும் பெண் என தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
லண்டன் அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை கடந்த 2016ஆம் ஆண்டு வைக்கப்பட்ட போது அளவெடுக்க வந்த பெண் தான் புகைப்படத்தில் உள்ள பெண் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.