நான் இந்தியா வந்தாலும் அதுமட்டும் இப்போ நடக்காது..! கறாராக நோ சொன்ன டொனால்ட் ட்ரம்ப்.!
Saving big trade deal with India for later Donald Trump
இந்தமாதம் 24, 25ம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது இருநாடுகள் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கூட்டுப்படை தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், வர்த்தக ஒப்பந்தம் குறித்து கையெழுத்திட முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவால் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் தாம் அதை தற்போது ஒத்தி வைப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகத்தில் தமக்கு பெரிய அதிருப்தி இருப்பதாகவும், இந்தியா அமெரிக்காவை உரிய முறையில் நடத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமக்கு மிகவும் பிடித்தவர் என கூறியுள்ள ட்ரம்ப், இந்தியா செல்லும் அந்த நாட்களை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.