குட் நியூஸ்! இனி வங்கி கணக்கில் குறைந்த பட்ச தொகை அவசியம் இல்லை.!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட SBI வங்கி!
SBI
இனி மக்கள் அனைவரும் வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பத் தொகை வைத்திருக்க வேண்டாம் என்ற சந்தோசமான செய்தியை எஸ்.பி.ஐ வங்கி அதிரடி அறிவிப்பை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
மக்கள் வங்கியில் அக்கவுண்ட் தொடங்க வேண்டும் என்றால் குறைந்த பட்ச தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகை கணக்கில் இருக்க வேண்டும். அதில் கிராம புறங்களில் குறைந்தபட்ச இருப்பாக ₹1, 000மும், நகர்ப் பகுதிகளில் ரூ.2,000மும், பெரு நகரங்களில் ரூ.3,000 இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.
ஆனால் தற்போது எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், எஸ்.பி.ஐ வங்கி கணக்கில் பூஜ்ஜியம் மதிப்பிலேயே தங்களது கணக்கை தொடங்கலாம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பால் பல கோடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறியுள்ளார்.