அச்சச்சோ.. உங்களுக்கும் வங்கிகணக்கு - பேன்கார்டு இணைக்கும் குறுஞ்செய்தி லிங்க்-உடன் வருகிறதா?.. உஷாரா இருங்க..!!
அச்சச்சோ.. உங்களுக்கும் வங்கிகணக்கு - பேன்கார்டு இணைக்கும் குறுஞ்செய்தி லிங்க்-உடன் வருகிறதா?.. உஷாரா இருங்க..!!
சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனை தடுக்க ஒருபுறம் அரசு கடுமையாக போராடி வருகிறது. மேலும் அவ்வப்போது நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், SBI வங்கியின் பெயரில் புதிய மோசடி ஒன்று நடப்பது அம்பலமாகியுள்ளது. வங்கி கணக்குடன் பேன் கார்டை இணைக்க வேண்டும் என லிங்க் வந்தால் அதை கிளிக் செய்யக்கூடாது என Press Information Bureau எச்சரித்துள்ளது.
தற்போது உங்களின் பேனை உடனடியாக இந்த லிங்கில் சென்று இணைவோம் என்று ஒரு வாட்ஸ்அப் லிங்க் வைரலாகி வருகிறது. இந்த லிங்கை கிளிக் செய்தால் நமது தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டு, நமது வங்கி சார்ந்த தகவல்கள் கண்காணிக்கப்படும் அல்லது பணம் திருடப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.