காத்து வாக்குல ரெண்டு காதல் செய்த மாணவனால்,.. நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட மாணவிகள்!.
காத்து வாக்குல ரெண்டு காதல் செய்த மாணவனால்,.. நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட மாணவிகள்!.
காதலனுக்காக பள்ளி மாணவிகள் இருவர் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் இரு பிரிவினராக கையில், பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொள்வது, இரும்பு கதவுகளில் தலையை கொண்டு மோத செய்வது என நெஞ்சை பதற வைக்கும் வகையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
அப்போது ஒரு தரப்பு மாணவிகள் கையில் இருக்கும் மட்டையை பிடுங்க முயற்சிக்க, மீண்டும் சண்டை ஆக்ரோஷமாக அந்த மாணவிகள் மீண்டும் சரமாரியாக தாக்கிக்கொள்கின்றனர். மேலும், அந்த வீடியோவில், இரு மாணவிகள் படிக்கட்டில் இருந்து விழுகின்றனர். அதில் ஒரு மாணவி இரும்பு கிரில்லில் வசமாக தள்ளிவிடப்படுகிறார். இதன் காரணமாக, அவரது மூக்கு உடைந்து இரத்தம் கொட்டுகிறது. அப்போது அவரது காதலன் வந்து அவரை பாதுகாக்கிறார் என அந்த பரபரக்கிறது அந்த வீடியோ.
எனினும் இந்த மோதலுக்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை. இந்த மோதல் விவகாரம் தொடர்பாக எந்த காவல் நிலையத்திலும் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பதும் சரியாக தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அந்த பள்ளி நிர்வாகமும் இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்தவொரு புகாரும், விளக்கமும் அளிக்கவில்லை.
எனினும், காட்சி ஊடகங்களில் வெளியான தகவலின் படி, காதலனுக்காக இருதரப்பு மாணவிகள் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேபள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிக்கு தெரியாமல் அவரது ஆண் நண்பர் வெளியே அழைத்துச்சென்று வந்துள்ளார்.
பின்னர், இந்த விவகாரம் காதலிக்கு தெரியவரவே, காதலனுடன் வெளியே சென்று வந்த மாணவியை சாலையில் வைத்து சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, அவர் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.