ஆற்றுக்கு நடுவே கதறிய இளம் பெண்கள்.! செல்பி எடுக்கச்சென்றபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.! இறுதியில் என்ன நடந்தது.?
Selfie In River Nearly Cost 2 Madhya Pradesh Girls Their Lives

மத்திய பிரதேச மாநிலத்தில் நதியின் நடுவில் செல்பி எடுக்க சென்ற இரண்டு இளம் பெண்கள் வேகமான நீரோட்டத்தின் மத்தியில் ஒரு பாறையில் சிக்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் வீடியோவாக வைரலாகிவருகிறது.
மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பெஞ்ச் ஆற்றின் அருகே ஒரு குழு சுற்றுலாவிற்காக சென்றுள்ளது. அப்போது அந்த குழுவில் இருந்த இரண்டு இளம் பெண்கள் ஆற்றின் நடுவே இறங்கி செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக சென்று ஆற்றின் நடுவே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஆற்றில் திடீரெனெ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் இளம் பெண்கள் இருவரும் திரும்பி வர முடியாமல் ஆற்றுக்கு நடுவே மாட்டிக்கொள்ள, கரையில் இருந்தவர்கள் இதுகுறித்து அந்த பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்குவந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிலர் தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்களை காப்பாற்றியுள்ளனர்.
ஒரு புகைப்படத்திற்காக ஆசைப்பட்டு இளம் பெண்கள் இருவர் உயிரிழக்கும் சூழலில் மாட்டிக்கொண்ட அந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.