Me Too சர்ச்சையில் சிக்கிய பிரபல பத்திரிகையாளர், கொரோனாவில் இருந்து மீண்டு அகால மரணம்..!
Me Too சர்ச்சையில் சிக்கிய பிரபல பத்திரிகையாளர், கொரோனாவில் இருந்து மீண்டு அகால மரணம்..!
தி வயர் இணையதள நிறுவனத்துடன் மிகவும் நெருக்கமான ஊடகவியலாளர் வினோத் துவா. இவர் இன்று கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் பிரபல பத்திரிகையாளராக இருந்து வந்த வினோத் துவா, என்.டி.டி.வி மற்றும் தூர்தர்சன் தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர். இவர் கொரோனாவில் இருந்து விடுபட்டாலும், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் 1 வருடமாக தவித்து வந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்துள்ளது.
இதுகுறித்து வினோத் துவாவின் மகள் மல்லிகா துவா உறுதி செய்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "இன்று எங்களின் மரியாதைக்குரிய, அச்சமற்ற, அசாதாரண தந்தை வினோத் துவா காலமானார். நாளை (05-12-2021) அன்று அவரின் உடல் லோதி மயானத்தில் தகனம் செய்யப்படும். அவரது மனைவி மற்றும் எங்களின் அம்மாவுடன் அவர் இனி சேர்ந்துவிடுவார்.
கடந்த 42 வருடங்களுக்கும் மேலாக கீழ்நிலை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் எனது தந்தை. மிகவும் விளிம்பு நிலையில் இருந்து வந்து, பத்திரிக்கை துறையில் சிகரத்தை அடைந்துள்ளார். அதிகார வர்க்கத்திடம் உண்மையை பேசி, அதற்காக பாடுபடும் ஒப்பற்ற மனிதர் அவர்" என்று தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தில் தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வினோத் துவா, உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில், வினோத் துவா மற்றும் அவரது மனைவி மருத்துவர் சின்னா துவா ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு ருந்தனர்.
இவர்களில், சின்னா துவா கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இயலாமல் உயிரிழந்துவிட, வினோத் துவா மட்டும் தப்பித்துக்கொண்டார். அதன்பின்னரும், வினோத் துவா இறந்துவிட்டதாக தகவல் வெளியாக, அவரது மகள் மல்லிகா துவா மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் தான் வினோத் துவாவின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வினோத் துவாவின் மீது பெண்மணியொருவர் பாலியல் குற்றசாட்டை முன்வைத்து மீ டூவில் விபரத்தை பதிவு செய்திருந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1 வருடம் உயிருடன் போராடி வந்த வினோத் துவா இன்று உயிரிழந்துள்ளார்.