தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருந்த மாணவ-மாணவிகள்.! வீடியோ வைரலானதால் பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.!

வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருந்த மாணவ-மாணவிகள்.! வீடியோ வைரலானதால் பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.!

seven students suspended over viral hugging video Advertisement

அசாம் மாநிலத்தில் வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டி அனைத்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் தெற்கு அசாம் பகுதியில் உள்ள சில்சார் அருகே ராமானுஜ் குப்தா கல்வி நிறுவனம் உள்ளது. இங்கு 11ஆம் வகுப்பில் படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப் பிடித்துக்கொண்டு நெருக்கமாக தொட்டுப் பேசிக்கொண்டும் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு மாணவியர், மூன்று மாணவர்கள் என மொத்தம் ஏழு பேரை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் முதல்வர் பூர்ணதீப் சந்தா கூறுகையில், இந்த சம்பவமானது மதிய உணவு இடைவெளியின் போது அரங்கேறியுள்ளது. இந்த நேரத்தில் ஆசியர்கள் யாரும் வகுப்பறையில் இருப்பது இல்லை. வகுப்பறைகளில் நாங்கள் சிசிடிவி வைத்துள்ளோம். அதேபோல் வளாகத்திற்குள் செல்போன்களுக்கு அனுமதியில்லை.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் புதிதாக இங்கு சேர்ந்த மாணவர்களே. இவர்களின் சேர்க்கை 15 நாள்களுக்கு முன்னர் தான் நடைபெற்றது என்றார். சஸ்பெண்டான மாணவ மாணவியர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வந்து விளக்கம் தர நோட்டீஸில் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#stuedents #suspended #hugging video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story