ரயில்வே ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளியை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்து.!!
ரயில்வே ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளியை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்து.!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியரின் மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாலு மகேந்திரன் என்ற நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்திப் குமார் என்ற நபர் திண்டிவனம் ரயில் நிலையத்தில் சிக்னல் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திண்டிவனம் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார். சந்திப் குமார் பணிக்கு சென்ற நேரங்களில் அவரது மனைவி தனியாக வீட்டில் இருந்திருக்கிறார்.
மதில் ஏறி குதித்து பாலியல் சீண்டல்
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று நள்ளிரவில் ரயில்வே குடியிருப்பின் மதில் சுவர் ஏறி குதித்த மர்ம நபர் ஒருவர் சந்திப் குமாரின் வீட்டிற்கு சென்று அவரது படுக்கையறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருக்கிறார். மேலும் உறங்கிக் கொண்டிருந்த சந்திப் குமாரின் மனைவியிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கம்... கர்ப்பத்தில் முடிந்த காதல்... 16 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை.!!
ரத்தம் சொட்ட சொட்ட தப்பி ஓட்டம்
அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்த சந்திப் குமாரின் மனைவி கத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் மதில் சுவர் ஏறி குதித்து தப்பி ஓட முயன்றிருக்கிறார். அப்போது கீழே விழுந்ததில் அந்த நபருக்கு அடிபட்டு ரத்தம் வந்திருக்கிறது. எனினும் அதை பொருட்படுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக வேகமாக ஓடி இருக்கிறார்.
காவல்துறை விசாரணை
பாலியல் சீண்டல் தொடர்பாக சந்திப் குமார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை நடத்திய விசாரணையில் பாலு மகேந்திரன் என்ற நபர் குற்ற செயலில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். மேலும் அந்த நபர் காயம் அடைந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை விசாரித்து வருகிறது.
கட்டப்பஞ்சாயத்து
இந்நிலையில் பாலியல் சீண்டல் காரணமாக கைது செய்யப்பட்ட பாலு மகேந்திரனை விடுவிக்க அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தலைமையில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 10 ரூபாய் ஜூஸ் குடித்து படுத்த படுக்கையாக சிறுவன்; கடலூரில் பேரதிர்ச்சி.. அலட்சியத்தில் அதிகாரிகள்?.! தாய் குமுறல்.!