வயிறு வலிக்குது என்று சொன்ன 14 வயது சிறுமி... கர்ப்பமாக்கிய 44 வயது காவலர் கைது.!
வயிறு வலிக்குது என்று சொன்ன 14 வயது சிறுமி... கர்ப்பமாக்கிய 44 வயது காவலர் கைது.!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி கர்ப்பமான வழக்கில் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அந்த மாணவியை சோதனை செய்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இடுக்கி மாவட்டம் மறையூர் காவல் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த திலீப்(44) என்பவர் தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கினார் என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சைல்டு ஹெல்ப் கேர் அமைப்பினருக்கு தகவல் கொடுத்தது.
அவர்கள் குழந்தை இடம் விசாரணை நடத்திய பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறை காவலர் திலீப் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து வருகிறது.