ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா! வெள்ளி செங்கல்கள் நன்கொடை! பிரதமர் மோடி பங்கேற்கிறாரா?
silver stonnes for ramar temple
உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பலதரப்பட்ட பண்டிதர்கள், ஜோதிடர்கள் நேரம் குறித்துக் கொடுத்துள்ளனர். இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அவர் கலந்து கொள்வது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவின்போது கருவறை அமையும் இடத்தில் வெள்ளியால் ஆன செங்கல்கள் பதிக்கப்படும் என்றும் 40 கிலோ எடையுள்ள வெள்ளியால் ஆன பிரம்மாண்ட அடிக்கல் நாட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால்தாஸ் வெள்ளி செங்கல் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். இந்த நிலையில் இந்திய தங்க சங்கம் சார்பில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக 34 கிலோ எடையில் வெள்ளி செங்கல் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.