7 முறை.. துரத்தி துரத்தி பழிவாங்கும் பாம்பு! வெளிவந்த அதிர்ச்சி பின்னணி! சினிமாவையும் மிஞ்சிய ஷாக் சம்பவம்!!
7 முறை.. துரத்தி துரத்தி பழிவாங்கும் பாம்பு! சினிமாவையும் மிஞ்சிய ஷாக் சம்பவம்!!
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் ஸ்வார் தெஹ்சில் மிர்சாபூர் என்ற பகுதியில் எஹ்சான் என்பவர் விவசாய பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது வீட்டிற்கு அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த போது அங்கு இரு பாம்புகள் பின்னி பிணைந்துக்கொண்டு இருந்துள்ளது. அதை கண்ட எஹ்சான் அதில் ஆண் பாம்பை மட்டும் கொன்றுள்ளார்.
மேலும் பெண் பாம்பு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்தபோது அவரை எங்கிருந்தோ வந்த பாம்பு தீண்டியுள்ளது. இந்நிலையில் வலி தாங்க முடியாமல் கதறி அழுத அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின் சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்துள்ளார்.
ஆனால் அதே பாம்பு மறுபடியும் அங்கு வந்து, அவரை கடித்துள்ளது. அவ்வாறு மொத்தம் 7 முறை அந்த பாம்பு அவரை கடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் பாம்பு ஒன்றாக இருக்கும்போது அதில் ஒன்றை மட்டும் கொன்றதால்தான் அதன் ஜோடி பாம்பு தன்னை பழிவாங்குவதாக எஹ்சான் நம்பி வருகிறார். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.