பயனுள்ள தகவல்: உங்கள் ஆதாரில் பெயர் மற்றும் பிறந்த தேதியை எத்தனை முறை மாற்றலாம் தெரியுமா...
பயனுள்ள தகவல்: உங்கள் ஆதாரில் பெயர் மற்றும் பிறந்த தேதியை எத்தனை முறை மாற்றலாம் தெரியுமா...
ஆதார் இந்திய திருநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. 12 டிஜிட்டை கொண்டிருக்கும் ஆதார் கார்டில் நம்மை பற்றிய அனைத்து விவரங்களும் சரியாக இருப்பது மிக முக்கியம்.
அப்படியான ஆதார் கார்டில் முகவரி மாற்றம் மற்றும் பெயர்களின் எழுத்துப்பிழைகளை திருத்தம் செய்வது உள்ளிட்டவற்றுக்கு UIDAI அமைப்பானது நமக்கு குறைந்த எண்ணிக்கையிலான வாய்ப்புகளையே வழங்குகிறது. இந்த வாய்ப்புகளின் மூலம் உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதியை மாற்றி கொள்ளலாம்.
UIDAI தனது அலுவலக குறிப்பாணை மூலம் தெரிவிக்கப்பட்டதாவது ஆதாரில் உங்கள் பெயரை 2 முறை மட்டுமே மாற்ற முடியும். அதேபோல் ஆதாரில் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.மேலும் ஆதார் என்ரோல்மென்டின் போது பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியிலிருந்து மூன்று வருடங்கள் கூடுதல் அல்லது குறைத்தல் என்ற வரம்பிற்குள் தான் பிறந்த தேதியை மாற்ற அனுமதி என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆதரில் உங்கள் பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்றால் பிறந்த தேதிக்கான முதன்மை ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.