மனைவியின் முன்னே மாமியாரின் மூக்கை கடித்து துப்பிய மருமகன்.! இதற்காகத்தானா? வெளியான அதிர்ச்சி சம்பவம்!!
son in law bite wife mothers nose
உத்திரபிரதேச மாநிலம், பரேய்லி என்ற பகுதியில் வசித்து வருபவர் காந்தா ரஹ்மான்,. இவருக்கு சாந்த்பி என்ற மகள் உள்ளார். இவர் இந்திய உணவுக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சாந்த்பிக்கு முகமது ஆஸ்ஃபக் என்பவருடன் கடந்த ஒரு ஆண்டுக்குமுன் திருமணம் நடைபெற்றது. மேலும் அப்பொழுது சாந்த்பி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில்,கடந்த சில நாள்களுக்கு முன், கர்ப்பமாக இருந்த சாந்த்பிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்,அவரது கணவர் முகமது , மேலும் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வருமாறு தொல்லை கொடுக்க துவங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிறந்த குழந்தையுடன் சாந்த்பி தனது தாய் வீட்டில் இருந்த நிலையில் அங்கு சென்ற முகமதுவும், அவரது தந்தையும் சண்டை போடதுவங்கியுள்ளனர். சண்டை முற்றவே முகமது சாந்த்பி மற்றும் அவரது தாயை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார். மேலும் தனது மாமியாரின் மூக்கை கடித்து காயத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் முகமதுவின் தந்தையும் பெண் என்று கூட பாராமல் காட்டுமிராண்டித்தனமாக சாந்த்பியின் அம்மாவின் காதை கத்தியால் அறுத்துள்ளார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து சண்டையை தடுத்து சாந்த்பி குடும்பத்தினரை காப்பாற்றி அவரது தாய்க்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தநிலையில் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தலைமறைவாகவுள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.